ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை பவர் ரத்து
ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை பவர் ரத்து செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் வீராங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திவ்யா ஜானகிராமன். இவர் அரசு விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், ரூ.9 லட்சம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சுயமாக செயல்படாமல் தலைவரின் கணவரே ஊராட்சி நிர்வாகம் செய்துள்ளார் என உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிக்கையில்தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் ஊராட்சியின் நிர்வாக நலன், மக்களின் நலன் கருதியும், ஊராட்சியின் அடிப்படை மற்றும் அத்யாவசிய நிர்வாக பணிகளுக்காக ஊராட்சியின் வங்கி கணக்குகளை இயக்க ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரத்தை நீக்கி, இவருக்கு பதிலாக ஊராட்சி காசோலைகளில் கையொப்பமிட மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுமதி அளித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆணையிட்டுள்ளார்.