ஊராட்சி மன்ற ஊழியர் தற்கொலை


ஊராட்சி மன்ற ஊழியர் தற்கொலை
x

அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி சின்னஞ்செட்டிபட்டியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 60). இவர் பந்தல்குடி ஊராட்சியில் தண்ணீர் திறந்து விடும் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் வீட்டில் பிரச்சினை நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சந்தானம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் விரைந்து வந்து சந்தானத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story