ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்


ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
x

விருத்தாசலத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. இதற்கு விருத்தாசலம் ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் நீதிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எருமனூர் ஊராட்சி மன்ற தலைவர் சவுமியா வீரமணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட கூட்டமைப்பின் தலைவர் முத்துக்குமாரசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கு மாவட்ட அளவில் இ டெண்டர் விடுவதை ரத்து செய்து, ஊராட்சி மூலமாகவே டெண்டர் விட அறிவிக்க வேண்டும். இதேபோல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை இ டெண்டர் விடுவதை தவிர்த்து ஊராட்சியின் மூலம் டெண்டர் விட வேண்டும். ஆடு, மாடு கொட்டகை பயனாளிகள் தேர்வு செய்வதை ஊராட்சி தீர்மானத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆலடி ஊராட்சி மன்ற தலைவர் பியூலா ஜெயக்குமார் நன்றி கூறினார்.


Next Story