டெண்டரை ரத்து செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் திரண்டதால் பரபரப்பு


டெண்டரை ரத்து செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் திரண்டதால் பரபரப்பு
x

டெண்டரை ரத்து செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் டெண்டர் விடப்பட்டது. இதனையடுத்து அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்கு தெரியாமல் டெண்டர் விடபட்டுள்ளதாகவும், ஊராட்சிகளில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியே மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே டெண்டரை ரத்து செய்து ஊராட்சி அளவில் டெண்டர் விட வேண்டும் என கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி மன்ற தலைவர்கள் திரண்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்ர்தை நடத்தினர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story