ஊராட்சி மன்ற தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


ஊராட்சி மன்ற தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x

ஊராட்சி மன்ற தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுப்பராமன்(வயது33). இந்த ஊராட்சியில் 4,023 பேர் வசித்து வருகின்றனர். 9 வார்டுகள் கொண்ட இந்த ஊராட்சியில் தொடர்ந்து 32 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக சுப்புராமன் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறார். எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர், கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை விடுத்தார்.. இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பராமனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story