ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டம்


ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2023 10:14 PM IST (Updated: 10 Feb 2023 11:36 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஆத்தூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக செந்தில்குமார் உள்ளார். ஒன்றிய கவுன்சிலராக தமிழரசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தெருவிளக்கு, குடிநீர், அங்கன்வாடி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தற்போது சுமார் ரூ.4 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில பணிகளை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சாமன்னன் செய்து வருகிறார். மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கும், ஒன்றிய கவுன்சிலரின் கணவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சாமன்னன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து தலைவரை ஆபாசமாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சுமார் 4 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, தாசில்தார் குமார் ஆகியோர் சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.


Next Story