ஊராட்சி மன்ற தலைவர் உண்ணாவிரத போராட்டம்


ஊராட்சி மன்ற தலைவர் உண்ணாவிரத போராட்டம்
x

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் லாடவரம் ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்துதர வேண்டும் என வலியுறுத்தி கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் எல்.எம்.குமரவேலு தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் கோவிந்தராஜுலு ஆகியோர் அங்கு சென்று அவரிடம் ஊராட்சிக்கு தேவையான திட்ட பணிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.


Next Story