தாமலேரிமுத்தூரில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தர்ணா
தாமலேரிமுத்தூரில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தர்ணா போராட்டம்
தாமலேரிமுத்தூரில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் சுதா இளங்கோ தலமையில் நேற்று நடந்தது. அப்போது துணைத்தலைவர் ராம்குமார் தனது பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும், காந்திநகர் பகுதியில் துணை சுகாதார நிலைய கட்டிடம் வந்தது. அதனை வேறு ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு தலைவர் தான் காரணம் என கூறி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ கூறுகையில் ஊராட்சிக்கான நிதியை முறையாக பயன்படுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி பின்னர் பணிக்கான வரவு-செலவு ரசிதுகள் அனைத்து வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு தீர்மானத்தில் கையெழுத்திடப்படுகிறது. இதில் நிதிக்கேற்றவாறு அவசரப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு இடங்களில் நீர் நிலை பிடிப்பு பகுதியாகவும், போதுமான இடவசதியும் இன்றி உள்ளது. இதனால் அதிகாரிகள் ஒட்டப்பட்டி ஊராட்சிக்கு மாற்றி உள்ளனர். இதில் எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.