ஊராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் மருத்துவ முகாம்


ஊராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி பணியாளர்கள் அலுவலர்கள் மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.

திருப்பத்தூர்

ஊராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் பொருட்டு 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நாளை (வியாழக்கிழமை) மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறவுள்ளது.

முகாம்களில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்ட உள்ளது. எனவே அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story