கிராம மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சாலை மறியல்


கிராம மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தவறான அறுவை சிகிச்சை அளித்ததை கண்டித்து கிராம மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சாலை மறியலில் ஈடுபட்டாா்.

கடலூர்

புவனகிரி:

புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி லட்சுமி பூதவராயன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பழனிசாமியின், கழுத்து தோள்பட்டையில் இருந்த கொழுப்பு கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதன்பிறகு பழனிசாமிக்கு உடலில் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு தவறான அறுவை சிகிச்சை அளித்ததை கண்டித்தும், அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கிராம மக்களுடன் சேர்ந்து பழனிசாமி புவனகிரி-விருத்தாசலம் சாலையில் பெருமாத்தூர் பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோக செய்தனர். இந்த போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story