குப்பை அகற்றுவதற்கு சொந்த நிதியில் டிராக்டர் வழங்கிய பஞ்சாயத்து தலைவர்


குப்பை அகற்றுவதற்கு சொந்த நிதியில் டிராக்டர் வழங்கிய பஞ்சாயத்து தலைவர்
x

கீழக்கடையம் பஞ்சாயத்தில் குப்பை அகற்றுவதற்கு பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தனது சொந்த நிதியில் டிராக்டர் வழங்கினார்.

தென்காசி

கடையம்:

கீழக்கடையம் பஞ்சாயத்து புலவனூர், மாதாபுரம், கீழக்கடையம், கல்யாணிபுரம், நரையப்புரம், பொன்மலை நகர் உள்ளிட்ட பல்வேறு சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு போதுமான அளவு குப்பை அள்ளி செல்லும் வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் அள்ளி சென்று மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தனது சொந்த நிதியில் இருந்து டிராக்டர் ஒன்றை வாங்கி பஞ்சாயத்துக்கு வழங்கியுள்ளார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story