ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி முதல் நிலை ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ஊராட்சி நிர்வாகத்தால் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் டெபாசிட் தொகை வசூல் செய்வதில் பாரபட்சம் இருப்பதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் முத்திருளன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்ஜீவன் திட்டத்தில் டெபாசிட் தொகை வசூலிப்பதை முறைப்படுத்த வலியுறுத்தியும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.