கத்தியை காட்டி ஊராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்; விவசாயி வலைவீச்சு
தேவதானப்பட்டி அருகே கத்தியை காட்டி ஊராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி தலைவியாக இருப்பவர் மகேஸ்வரி (வயது 38). இந்தநிலையில் இன்று ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிவடைந்தவுடன் வார்டு உறுப்பினர்களுடன் மகேஸ்வரி பேசிக்கொண்டிருந்தார். அப்போது கெங்குவார்பட்டியை சேர்ந்த விவசாயியான பூபாலன் (35) என்பவர் அங்கு வந்து, மகேஸ்வரியிடம் ஊராட்சியில் திட்டங்களை செயல்படுத்த தனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும், தன்னை கேட்டு தான் தீர்மான நகல் தயார்படுத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு மகேஸ்வரி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பூபாலன், கத்தியை காட்டி மகேஸ்வரியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பூபாலனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story