பஞ்சாயத்து தலைவர் வீட்டில் கண்ணாடி உடைப்பு
ஏரல் அருகே பஞ்சாயத்து தலைவர் வீட்டில் கண்ணாடி உடைக்கப்பட்டது.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள உமரிக்காடு ஊரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 36). இவர் உமரிக்காடு பஞ்சாயத்து தலைவராகவும், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு ஏரல் பஜாரில் பொருட்கள் வாங்க வந்துள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு 10 மணிக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் இருக்கை கிழித்து போடப்பட்டுள்ளது. வீட்டில் கதவு கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. வீட்டின் அருகில் உள்ள செடிகளும் வெட்டப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்குமார், இதுபற்றி ஏரல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.