ரூ.40 லட்சம் மதிப்பில் ஊராட்சி செயலக கட்டிடம்
சாலை ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுமான பணியை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்
விழுப்புரம்
மயிலம்,
மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சாலை ஊராட்சியில் ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதை மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் பூமி பூஜை செய்து, கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவதாஸ், பரிமேலழகன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், என்ஜினீயர் மகேந்திரவர்மன், பணி பார்வையாளர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி கருணாநிதி, கவுன்சிலர்கள் உமா ஞானசேகர், பரிதா சம்சுதீன், ஊராட்சி செயலாளர் முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story