ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம்


ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம்
x

ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம்

தஞ்சாவூர்

கபிஸ்தலம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் ஒன்றிய தலைவர் பிச்சை தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சங்கர், இணை தலைவர் சண்முகம், துணைச் செயலாளர் ஜெய்சங்கர், இணைச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கலைவாணன் வரவேற்றார். கூட்டத்தில், வருகிற 6-ந்தேதி சென்னையில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பது. கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது. அலவந்திபுரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய காமராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், வீரமணி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.


Next Story