அரசு பஸ் மோதி ஊராட்சி செயலாளர் பலி

அரசு பஸ் மோதி ஊராட்சி செயலாளர் பலியானார்
லால்குடி அருகே உள்ள குறிச்சியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கரிகாலன் (வயது 46). இவர் தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோணப்பம்பட்டி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தா.பேட்டையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.அப்போது லால்குடி அருகே உள்ள மேலவாளாடி அடுத்த செம்பழனி அருகே சென்றபோது, லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கரிகாலன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் கருடமங்கலத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் (45) என்பவரை கைது செய்தனர்.