காட்டுப்பன்றி மீது மோட்டார்சைக்கிள் மோதி ஊராட்சி செயலாளர் பலி


காட்டுப்பன்றி மீது மோட்டார்சைக்கிள் மோதி ஊராட்சி செயலாளர் பலி
x

திமிரி அருகே காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதி ஊராட்சி செயலாளர் பலியானார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 58). இவர் புங்கனூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். மேலும் ஊராட்சி பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூர்த்தி அவரது தங்கையின் மகன் வேல்முருகனை மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். விளாப்பாக்கம் அருகே உள்ள நாராயணபுரம் பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே திடீரென காட்டுப்பன்றி வேகமாக வந்தது.

அதன் மீது இவரது மோட்டார்சைக்கிள் மோதியதில் மூர்த்தி மற்றும் வேல்முருகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேல்முருகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story