ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
தென்னலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட தென்னலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி மற்றும் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி புரவலர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் பூங்குழலி, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்றார்.விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளங்கோவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கற்பகவல்லி நன்றி கூறினார்.