ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே ஏம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். சித்திரம்பூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக அரிமளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனிவேல் ராஜா, கல்வியாளர் ஏம்பல் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ-மாணவிகளின் பல்வேறு இன்னிசை நடனங்கள், மாறு வேட போட்டிகள், பட்டிமன்றங்கள், தனிநபர் பேச்சுப்போட்டி, தமிழ் இலக்கணம், திருக்குறள் மற்றும் ஆங்கில இலக்கியம் ஒப்புவித்தல் ஆகியவை அரங்கேற்றம் செய்யப்பட்டது. இறுதியில் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.