பஞ்சாயத்து யூனியன் சிறப்பு கூட்டம்


பஞ்சாயத்து யூனியன் சிறப்பு கூட்டம்
x

கோவில்பட்டியில் பஞ்சாயத்து யூனியன் சிறப்பு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் ராஜேஷ் குமார், மேலாளர் முத்துப்பாண்டி, பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 15-வது மத்திய நிதி குழு மானியத்தில் வரதம்பட்டி பஞ்சாயத்து காட்டுராமன்பட்டி கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் இணைப்பு, மற்றும் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்வதற்கு ரூ.16 லட்சத்து 26 ஆயிரத்து 741-ம், வரதம்பட்டி பஞ்சாயத்து வள்ளிநாயகிபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்ததற்கு ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் அனுமதி அளிக்கப்பட்டது.


Next Story