கழிவறையில் வழுக்கி விழுந்து பஞ்சாயத்து ஊழியர் சாவு


கழிவறையில் வழுக்கி விழுந்து பஞ்சாயத்து ஊழியர் சாவு
x

கல்லிடைக்குறிச்சி அருகே கழிவறையில் வழுக்கி விழுந்து பஞ்சாயத்து ஊழியர் இறந்தார்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 36). இவர் தேவநல்லூர் பஞ்சாயத்தில் ஊழியாக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், அதனை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த கழிவறைக்கு சென்ற போது, அங்கு வேல்முருகன் வழுக்கி விழுந்து இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story