மின்சாரம் பாய்ந்து ஊராட்சி ஊழியர் சாவு


மின்சாரம் பாய்ந்து ஊராட்சி ஊழியர் சாவு
x

மின்சாரம் பாய்ந்து ஊராட்சி ஊழியர் பலியானார்.

திருச்சி

வளநாடு அருகே உள்ள கண்ணுக்குழி, கல்லாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 54). இவர் கண்ணுக்குழி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகே உள்ள மின்கம்பி அறுந்து வேலி மீது விழுந்து தீப்பிடித்தது. இதை கண்ட பழனிச்சாமி மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் வேலியில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது, அவர் மின்கம்பியில் மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ஒரு பசுமாடு மீதும் மின்சாரம் பாய்ந்து செத்தது. இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story