யாகசாலை அமைக்க பந்தக்கால் முகூர்த்தம்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஜூலை 5-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு யாகசாலை அமைக்க பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
சிக்கல்:
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஜூலை 5-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு யாகசாலை அமைக்க பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
சிங்காரவேலவர் கோவில்
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் (நவநீதேஸ்வரர் சாமி) கோவில் உள்ளது. இது முருகன் கோவில்களில் சிறப்பு பெற்ற ஒன்றாகும்.
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், அருணகிரிநாதர் ஆகியோரால் பக்தி பதிகம் பாடப்பெற்ற தலமாகும். வசிஷ்ட மகரிஷி பூஜித்த தலம். முருகன், இந்த கோவிலில் உள்ளவேல்ெநடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த தலம் என்ற பெருமைக்குரியது.
இந்த கோவிலில் கடந்த 1932, 1961, 1991, 2004-ம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்றது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்து 18 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பந்தக்கால் முகூர்த்தம்
உபயதாரர் நிதி மற்றும் கோவில் நிதி என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ேகாவில் குடமுழுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று சிங்காரவேலவர் கோவிலில் யாகசாலை அமைக்க பந்தக்கால் முகூர்த்தம் மற்றும் ருத்ரபாராயணம் வழிபாடு நடைபெற்றது.கோவில் அர்ச்சகர்கள் ராமநாத சிவாச்சாரியார், அருண் குமார், கந்தசாமி சிவாச்சாரியார், மயிலாடுதுறை சிவபுரம் சிவாகம பாடசாலை மாணவர்கள் ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.இதில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.