பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா


பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
x

பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

திருவாரூர்

முத்துப்பேட்டை ஒன்றியம் பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியை நிர்மலா வரவேற்றார். தேசிய அளவில் நடந்த தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திறன் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அஜிதாவுக்கும், மாநில அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மாவட்ட அளவில் நடந்த புத்தகத் திருவிழா கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும்- பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியை நதியா நன்றி கூறினார்.


Next Story