திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம்


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கோவில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமையில் தேர் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் தலைமையில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தங்கத் தோளுக்கினியான் நிகழ்ச்சியும், மாலையில் ஹம்ச வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

6-ந்தேதி தேரோட்டம்

விழாவில் தினசரி சிறப்பு பூஜையும், பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. விழாவில் 6-ந்தேதி(வியாழக்கிழமை) காலையில் தேரோட்டமும், மாலையில் தீர்த்தவாரி சாற்று முறையும், 7-ந்தேதி(வௌ்ளிக்கிழமை) தங்க பல்லக்கு மற்றும் மட்டையடி உற்சவமும் மாலையில் புஷ்ப யாகம், இரவு ஸப்தாவரணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து 8, 9 மற்றும் 10-ந்தேதிகளில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 14-ந்தேதி தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ் வருட பிறப்பு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும், இரவு கருட சேவை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பவர் ஏஜென்ட் கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள், நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story