பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்


பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரால் கொண்டாடப்பட்டது. 10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலையில் முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து சப்பரத்தில் புறப்பட்டு சென்று தேரில் எழுந்தருளினார்.

காலை 8.15 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. ஜமீன்தார் சேவுகப்பாண்டியன் என்ற விக்னேஸ்வர சின்னத்தம்பியார் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் காலை 10.30 மணியளவில் கோவில் நிலையை வந்தடைந்தது.

விழாவையொட்டி புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்துபாண்டியன், சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணியளவில் தெப்பத்திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் சேவுக பாண்டியன் என்ற விக்னேஸ்வர சின்னத்தம்பியார், ராணி பாலகுமாரி நாச்சியார் ஆகியோர் செய்துள்ளனர்.



Next Story