காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்


காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
x

அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை காசிநாதர் சுவாமி ேகாவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சிறப்பு அபிஷேக தீபாராதனைகள், கொடி பட்டம் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 10 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று காலையில் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இதில் அறங்காவலர்குழு தலைவர்கள் சங்கு சபாபதி, முருகசுவாமிநாதன் மற்றும் நிர்வாகக் குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா நடைபெறும். விழாவில் 8-ம் திருநாள் அன்று அகஸ்தீஸ்வரருக்கு சாமி திருமண காட்சி கொடுக்கும் வைபவமும், முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் அம்பை தாமிரபரணி நதிக்கரையில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், கும்பிடுநமஸ்காரம், அங்கபிரதட்சனம் ஆகியவை நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு திருவிழாவின் போது அந்தந்த சமுதாயங்களின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சியாக பட்டிமன்றங்கள், இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், செங்குந்தர் சமுதாய நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.


Next Story