தர்ம சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா


தர்ம சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா
x

திக்குறிச்சி தர்ம சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா

கன்னியாகுமரி

களியக்காவிளை,

திக்குறிச்சி தர்ம சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 6 நாட்கள் நடந்தது. திருவிழா நாட்களில் கணபதிஹோமம், கலசபூஜை, பஸ்மாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆராட்டு விழா நடந்தது. இதையொட்டி தர்ம சாஸ்தா பல்லக்கில் ஊர்வலமாக திக்குறிச்சி மகாதேவர் கோவில் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தாமிரபரணி ஆற்றில் ஆராட்டு நடந்தது. தொடர்ந்து மஞ்ள் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி பஞ்சவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டார். இந்த விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story