சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா


சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
x

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

தஞ்சாவூர்

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில்

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழ்வது சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில். இக்கோவிலில் வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 4-ந்தேதி காலை வள்ளி தேவசேனா, சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு வெள்ளி ரதத்தில் வீதி உலா மற்றும் நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

6-ந்தேதி இரவு விக்னேஸ்வர பூஜை நிகழ்ச்சியும், 7-ந் தேதி காலை வள்ளி தேவசேனா, சண்முக பெருமாள், வேடமூர்த்தி, வள்ளிநாயகி நாரதர், நம்பிராஜன், நந்தமோகினி உற்சவ மண்டபம் எழுந்தருளிகின்றனர்.

யானை விரட்டுதல் நிகழ்ச்சி

8-ந்தேதி காலை அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி, அளவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், சண்முக பெருமாள், வள்ளிநாயகியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 9, 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், வள்ளி தேவசேனா, சண்முகசாமி புறப்படுதல், வேடமூர்த்தி, வள்ளிநாயகியார் பல்லக்கில் வீதி உலா காட்சி நடக்கிறது.

12-ந்தேதி காலை சண்முக பெருமாளுக்கு 108 சங்காபிஷேகமும், இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story