திருமேனி நாதர் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா


திருமேனி நாதர் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா
x

திருமேனி நாதர் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி திருமேனிநாதர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிைன முன்னிட்டு தினமும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 2-ந் தேதி திருக்கல்யாண வைபவமும், 3-ந் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் குகனேஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story