ஏற்றுமதி வர்த்தகம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்


ஏற்றுமதி வர்த்தகம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்
x
திருப்பூர்


இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் என்று பியோ தலைவர் சக்திவேல் கூறியுள்ளார்.

வர்த்தக ஒப்பந்தத்துக்கு வரவேற்பு

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உதவிய இந்திய தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. ஏற்கனவே துபாய் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் காரணமாக இருநாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மேம்படும்.

தற்போதைய நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தகம் 98.3 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியில்லாமல் மேற்கொள்ள முடியும். அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 100 சதவீதம் வரியில்லா வர்த்தகம் அமையும். ஆயத்த ஆடை, ஜவுளி, தோல், காலணிகள், எந்திரங்கள், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், மருந்து வகை பொருட்களை இறக்குமதி செய்ய வசதியாக அமையும். நிலக்கரி, காப்பர், நிக்கல், அலுமினியம், மாங்கனீசு, கம்பளி உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரிக்கும். 18 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை படிக்கும் இந்திய மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு விசா எளிதில் கிடைப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஏற்றுமதி அஏற்றுமதி வர்த்தகம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்திகரிக்கும்

வருகிற 2025-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் 15 பில்லியன் டாலராக உயரும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல் இருநாட்டு பொருளாதார வர்த்தகம் 50 பில்லியன் டாலராக உயரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story