பன்னாள் வெங்கடாசலபதி பெருமாள் கோவில் குடமுழுக்கு


பன்னாள் வெங்கடாசலபதி பெருமாள் கோவில் குடமுழுக்கு
x

பன்னாள் வெங்கடாசலபதி பெருமாள் கோவில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

வாய்மேட்டை அடுத்த பன்னாள் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் திருப்பணி வேலைகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 6-ந்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது. நேற்றுமுன்தினம் முதல் கால யாக பூஜையும், நேற்று 2-ம் கால பூஜையும் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்பு புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் கோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் உள்ளே உள்ள மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story