பண்ணாரி மாரியம்மன் சப்பரம் கோவிலை சென்றடைந்தது
பண்ணாரி மாரியம்மன்
சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மறுநாள் 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பரம் வீதி உலா கோவிலில் இருந்து தொடங்கியது. அம்மனின் சப்பரம் வீதி உலா பண்ணாரியை சுற்றியுள்ள கிராமங்களில் சென்றதுடன், சத்தியமங்கலத்திலும் தொடா்ந்து 2 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனின் சப்பரம் தங்க வைக்கப்பட்டது.
நேற்று காலை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து அம்மனின் சப்பரம் வீதி உலா புறப்பட்டது. பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடபள்ளி, புதுக்குய்யனூர், பசுவபாளையம், புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம், ராஜன் நகர் வழியாக அம்மனின் சப்பரம் மீண்டும் நள்ளிரவில் பண்ணாரி கோவிலை சென்றடைந்தது. இன்று (புதன்கிழமை) கம்பம் சாட்டும் விழா நடைபெறுகிறது.