பண்ருட்டி நகரசபை கூட்டம்
பண்ருட்டியில் நகரசபை கூட்டம் நடந்தது.
கடலூர்
பண்ருட்டி,
பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர சபை கூட்டம் நடந்தது. இதற்கு நகர சபை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகரசபை துணை தலைவர் சிவா கூறுகையில், காய்கறி மார்க்கெட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு மேடாக உள்ளது. எனவே அதனை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். அ.தி.மு.க. கவுன்சிலர் மோகன் கூறுகையில், வார்டு குழுவினருக்கு தனி இடத்தினை வார்டு பகுதியில் ஒதுக்கி தர வேண்டும என்றார். தொடர்ந்து நகர சபை தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், பண்ருட்டியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகளை எல்.இ. டி.பல்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ், தி.மு.க.கவுன்சிலர்கள் கதிர்காமன், சோழன், ஆனந்தி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story