பண்ருட்டி, திட்டக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்


பண்ருட்டி, திட்டக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி, திட்டக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி நகர மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி.நகர், சாமியார் தர்கா, சிவராமன் நகர், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்தூர், அங்கு செட்டிப்பாளையம், கொக்குப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இதேபோல், பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டித்தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், சோழநகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலூர், கொடிக்களம், திருவட்டத்துறை, பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிக்காடு, சவுந்தர சோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிக்குளம், அரியராவி, பெ.பூவனூர், ஓ.கீரனூர், பெரிய கொசப்பள்ளம், மேலூர், மருதத்தூர், எறப்பாவூர், வடகரை, கோனூர், நந்திமங்கலம், கொல்லத்தங்குறிச்சி, தி.அகரம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி நகரம், கோழியூர், வதிஷ்டபுரம், பட்டூர், எழுமாத்தூர், போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவளம், புதுக்குளம், இ.கீரனூர், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலூர், நிதிநத்தம், ஏ.அகரம் நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழநல்லூர், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கறும்பூர், குறுக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

மேற்கண்ட தகவல்களை பண்ருட்டி, திட்டக்குடி மின்வாரிய செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், சுகன்யா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளனர்.


Next Story