பண்ருட்டி பலாப்பழம் விற்பனை


பண்ருட்டி பலாப்பழம் விற்பனை
x
சேலம்

சூரமங்கலம்:-

வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க சேலம் உழவர் சந்தைகளில் வெளி மாவட்டங்களில் உற்பத்தியாகும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் உழவர் சந்தைகளில் தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத்தின் மூலம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை தொடங்கியது. இந்த விற்பனையை வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், சூரமங்கலம் உழவர் சந்தையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சூரமங்கலம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் பசுபதி, ஸ்ரீதேவி, சரோஜினி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய காய்கறிகளை சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடக்கும் என்றனர்.


Next Story