பி.ஏ.பி.உடுமலை கால்வாய் கரைப்பகுதியில் கற்கள், சிலாப்புகள் சரிந்து விழுந்தன


பி.ஏ.பி.உடுமலை கால்வாய் கரைப்பகுதியில்  கற்கள், சிலாப்புகள் சரிந்து விழுந்தன
x
திருப்பூர்


பி.ஏ.பி.உடுமலை கால்வாயின் கரைப்பகுதியில் சிலாப்புகள் உடைந்து விழுந்துள்ளதால் பாசனத்திற்கான தண்ணீர் விரயமாகிறது.

பி.ஏ.பி.உடுமலை கால்வாய்

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி) திருப்பூர், கோவை மாவட்டங்களைச்சேர்ந்த 3லட்சத்து77ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பாசன பகுதிகள்4மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி.2-வது மண்டல பாசனத்திற்கான தண்ணீர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி திறந்துவிடப்பட்டது.

இதில் இடைவெளி விட்டு 2சுற்றுகள் தண்ணீர் விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் உடுமலை கால்வாயில் சென்று கொண்டிருந்தது.உடுமலை கால்வாயில் செல்லும் தண்ணீர் கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனபகுதிகளுக்கு செல்லும்.2-வது சுற்று தண்ணீர் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டு, தற்போது இடைவெளி விடப்பட்டுள்ளது.அடுத்து3-வது சுற்றுக்கான தண்ணீர் திறந்து விடப்படும்.

கால்வாயில் உடைந்துவிழுந்துள்ள சிலாப்புகள்

இந்த நிலையில் உடுமலை கால்வாயின் உள்பகுதியில் கரையின் இரண்டு புறமும் பதிக்கப்பட்டு சிமெண்டு பூச்சு பூசப்பட்டுள்ள பகுதிகள் பள்ளபாளையம், மடத்தூர் பிரிவு, அரசு கலைக்கல்லூரிக்கு பின்புறம் உள்ளிட்டு சில இடங்களில் ஆங்காங்கு சேதமடைந்து கற்கள் மற்றும் சிலாப்புகள் சரிந்து கால்வாய்குள் விழுந்து கிடக்கிறது.

அவ்வாறு சேதமடைந்துள்ள கரைப்பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு விரயமாகிறது. அதனால், கடைமடைக்கு செல்ல வேண்டிய தண்ணீரின் அளவு குறைகிறது. அதனால் பாசனத்திற்கான தண்ணீர் விரயமாவதை தடுக்கும் வகையில் பி.ஏ.பி.கால்வாயில் கற்கள் மற்றும் சிலாப்புகள் உடைந்து சேதமடைந்துள்ள இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story