பப்பாளி விளைச்சல் அமோகம்


பப்பாளி விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி பகுதிகளில் பப்பாளி விளைச்சல் அமோகமாக உள்ளது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி பகுதிகளில் பப்பாளி விளைச்சல் அமோகமாக உள்ளது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பப்பாளி சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் இருந்து பப்பாளி அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

வேப்பனப்பள்ளி பகுதியில் இந்த ஆண்டு பருவமழை பெய்ததால் பப்பாளி விளைச்சல் அமோகமாக உள்ளது. தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குகிறது. இதனால் விவசாயிகள் பப்பாளி அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒரு கிலோ பப்பாளி ரகத்திற்கு ஏற்ப ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போது தீர்த்தம் கிராமத்தில் தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குவதை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story