மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கானகாகிதப் பறவை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கானகாகிதப் பறவை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கானகாகிதப் பறவை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வின் ஒருபகுதியாக காகிதப்பறவை தினம் தங்கம் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பார்வதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் வரவேற்றார். செயலாளர் நவமணி தங்கராஜ் பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜசெல்வி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தனி நபராகச் செயல்படாமல், சக மாணவர்களோடு இணைந்து மாணவர்களின் திறமைக்கேற்ப வெட்டுதல், மடித்தல், ஒட்டுதல் போன்ற செயல்பாட்டினைச் சிறப்பாகச் செய்தனர். காகித பறவை செய்தல், கை அச்சினை வண்ணங்கள் பூசி பதித்தல், பட்டம் செய்தல், பிரமிடு செய்தல், பலூன் பறக்க விடுதல், பேப்பர் கப் செய்தல், மரக் கன்றுகள் நடுதல் உள்ளிட்டவை நடந்தன. நிகழ்ச்சியில் ஆசிரிய பயிற்றுநர்கள் சுகந்தி, பால்சாமி, மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி பயிற்றுநர் ராஜா சண்முகம், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் வேல் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story