கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஊர்வலம்


கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஊர்வலம்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் கீழைநாடுகளின் 'லூர்துநகர்' என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும்தியானமண்டபம் செல்லும் சாலையில் 460 அடி நீளத்தில் மின்விளக்கு அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பேராலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை பேராலயம் சார்பில் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரளானோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பாட்டுப்பாடி விண்மீன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் விண்மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு, சர்ச் சாலை வழியாக பேராலயத்தை சென்றடைந்தது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், பங்கு மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story