பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி தொடக்கம்
பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி தொடங்கியது.
தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், மாவட்ட வாலிபால் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சாம்பியன்ஷிப்-2023 போட்டி சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நேற்று மாலை தொடங்கியது. வருவாய்கோட்டாட்சியர் நிறைமதி முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்தார்.
சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஜார்கண்ட், ராஜஸ்தான், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஹரியானா, இமாசலபிரதேசம், தெலுங்கானா உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் அடங்கிய அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கவுள்ளார்.