பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பால்குட திருவிழா
பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் வாணி கருப்பணசாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா, பாரிவேட்டை மற்றும் பால்குட திருவிழா நடந்தது. விழாவிற்கு திருப்பணி செம்மல் நாகரத்தினம் தலைமை தாங்கினார். பிருந்தா ஜோதி குமார், கலாவதி முத்துராமன், ஆயிர வைசிய சபைத்தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ் திலக் அனைவரையும் வரவேற்றார். பால்குட ஊர்வலத்தை மதுரை முத்து லட்சுமி பிரபாகரன், பரமக்குடி அங்காள பரமேஸ்வரி வாணி கருப்பணசாமி கோவில் பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த பால் குட ஊர்வலமானது கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பால்குடத்தில் இருந்த பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் வைரம் ஜீவானந்தம் நன்றி கூறினார். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.