பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளை பார்வதிஅம்மன் கோவில் திருவிழா
பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளை பார்வதிஅம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
உடன்குடி:
பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளை பார்வதி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 22-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 7மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் கோபுர கலசங்கள் மற்றும் பார்வதி அம்மன பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு கும்பாபிஷேகம் நடந்தது, நன்பகல் ஒரு மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு கற்பூர தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்தி சிறப்பு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு பக்தர்கள் பொங்கலிட்டு சிவப்பு சாத்தி சிறப்பு வழிபாடு மற்றும் பக்தர்களுக்கு கூழ் வார்த்தல் இரவு 8 மணிக்கு வில்லிசை அம்மனுக்கு பக்தர்கள் பட்டு மற்றும் நேர்த்திகடன் செலுத்துதல், நள்ளிரவு 12 மணி அம்மனுக்கு விசேஷ புஷ்ப அலங்கார காட்சி தீபாராதனை, பெண்கள் முளைப்பாரி ஊர்வலம், கரகாட்டம் குறவன் குறத்தியாட்டம் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு வில்லிசையும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மாலை 3 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.