பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகு சீரமைப்பு பணி வருகிற 20-ந் தேதிக்குள் நிறைவடையும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகு சீரமைப்பு பணி வருகிற 20-ந் தேதிக்குள் நிறைவடையும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
திருப்பூர்
பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகு சீரமைப்பு பணி வருகிற 20-ந் தேதிக்குள் நிறைவடையும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
அணையின் மதகு ஷட்டர் சீரமைப்பு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் நீர்பாசன திட்டத்தில் முக்கிய திட்டமாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் ஒன்றாகும். கடந்த செப்டம்பர் மாதம் அணையின் 3 மதகில், ஒரு மதகு ஷட்டரை தாங்கும் சங்கிலி அறுந்ததால் 5.8 டி.எம்.சி. தண்ணீர் வீணாக ஆற்றில் பாய்ந்து கடலில் கலந்து விட்டது.
20-ந் தேதிக்குள் நிறைவடையும்
முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு ரூ.7 கோடியே 20 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஷட்டரை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற 2 ஷட்டர்கள் பராமரிப்பு பணியும் நடக்கிறது. 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த பணிகள் வருகிற 20-ந் தேதிக்குள் நிறைவடையும். அதற்கு பிறகு பெய்யும் மழைநீர் வீணாகாமல் தடுக்கப்படும். இதனால் கோவை, திருப்பூர் மாவட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, சர்க்கார்பதி பகுதியில் உள்ள அணைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
===========
3 காலம்
மதகு சீரமைப்பு பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.