பிறவி மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


பிறவி மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு இன்று(புதன்கிழமை) நடக்கிறது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு இன்று(புதன்கிழமை) நடக்கிறது.

பிறவி மருந்தீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது.பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து திருப்பணிகள் நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிந்து இன்று(புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10.30-க்குள் குடமுழுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு

முன்னதாக நான்கு வீதிகளில் உள்ள பிள்ளையார் மற்றும் அரச மரத்தடி பிள்ளையார், காளியம்மன் கோவில் ஆகிய சுற்றுக் கோவில்களுக்கு இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 6-ம் கால யாக பூஜை முடிவடைந்து ராஜகோபுரம், கட்டக்கோபுரம், மூலவர் விமானம், அம்பாள் விமானம், அம்பாள் ராஜகோபுரம், வேதாரண்யேஸ்வரர், தியாகராஜர் விமானம் உள்ளிட்ட விமானங்களில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் மணவழகன், செயல் அலுவலர் முருகையன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நேரடி மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story