பெற்றோர் தகராறு; 10 பேர் மீது வழக்கு


பெற்றோர் தகராறு; 10 பேர் மீது வழக்கு
x
சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலம் அருகே உள்ள பாரகல்லூர் பகுதியை சேர்ந்த தம்பதியின் மகள் ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளுக்கு அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் பள்ளியில் சாக்லெட் கொடுத்துள்ளார். இதை வாங்க மறுத்த அந்த மாணவியை மாணவர் அடித்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் மாணவரின் பெற்றோருடன் கண்டித்த போது இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story