வேதாரண்யம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழாவுக்குமாணவர்களின் பெற்றோருக்கு தாம்பூலம் வைத்து அழைப்பு


வேதாரண்யம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழாவுக்குமாணவர்களின் பெற்றோருக்கு தாம்பூலம் வைத்து அழைப்பு
x
தினத்தந்தி 17 Feb 2023 12:45 AM IST (Updated: 17 Feb 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழாவுக்கு வருமாறு மாணவர்களின் பெற்றோருக்கு தாம்பூலம் வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழாவுக்கு வருமாறு மாணவர்களின் பெற்றோருக்கு தாம்பூலம் வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.

அரசு தொடக்கப்பள்ளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 128 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியில் தற்போது 188 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த அரசு பள்ளியில் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் ேததி ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜன் துணைத்தலைவர் வீரராசு, துணை செயலாளர் வெற்றிவேல் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை வீடு, வீடாக சென்று வெற்றிலைப்பாக்கு, பழத்துடன் (தாம்பூலம்) அழைப்பிதழ் வைத்து பள்ளி ஆண்டு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கும் இதேபோல் தாம்பூலம் வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.

பெற்றோர் மகிழ்ச்சி

திருமண வீடுகளில் மட்டுமே தாம்பூலம் வைத்து அழைப்பார்கள். ஆனால் அரசு பள்ளி ஆண்டு விழாவுக்கு தாம்பூலம் வைத்து அழைப்பு விடுத்தது அந்த கிராம பகுதியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story