மகளை மீட்டுத்தரக்கோரி பெற்றோர் மனுபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்தனர்


மகளை மீட்டுத்தரக்கோரி பெற்றோர் மனுபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்தனர்
x

மகளை மீட்டுத்தரக்கோரி பெற்றோர் மனு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்தனர்

ஈரோடு

ஈரோடு மணல்மேடு குமாரசாமி 2-வது வீதியை சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி பூங்கொடி ஆகியோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், இளைய மகள் சந்தியா (வயது 19) ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தியா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், வழக்கு பதிவு செய்தனர். ஆனால், தற்போது வரை காணாமல் போன எங்களது மகளை கண்டுபிடிக்கவில்லை.

இதற்கிடையில் எனது மகளை ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்றதாக எங்களுக்கு தெரியவந்தது. அவர் திருட்டு, ஏ.டி.எம். கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்தவர். அந்த வாலிபர் எங்களது மகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்து விடுவார் அல்லது கொலை செய்து விடுவார் என நாங்கள் பயப்படுகிறோம். எனவே, என் மகளை அந்த வாலிபர் கொலை செய்வதற்கு முன்பு மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story