பள்ளியை பெற்றோர் முற்றுகை
திருவிைடமருதூர் அருகே ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை பெற்றோர் முற்றுைகயிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவிடைமருதூர்,
திருவிைடமருதூர் அருகே ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை பெற்றோர் முற்றுைகயிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடக்கப்பள்ளி
கும்பகோணம் அ௫கே திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 74 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மஞ்சுளா என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் மணிமாறன், ஆரோக்கியமேரி ஆகியோர் ஆசிரியர்- ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மணிமாறன்- ஆரோக்கியமேரி இருவரும் கணவன்- மனைவி ஆவர்.
முற்றுகை
இந்தநிலையில் ஆசிரியர் மணிமாறன் கடந்த 30-ந் தேதி அம்மன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆசிரியை ஆரோக்கியமேரி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். நேற்று தலைமை ஆசிரியை மஞ்சுளா மட்டும் பள்ளிக்கு வந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் காலை பள்ளி முன்பு திரண்டு மணிமாறன்- ஆரோக்கியமேரியை மாற்றக் கூடாது என வலியுறுத்தி பள்ளியை முற்றுைகயிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன், வட்டார கல்வி அலுவலர்கள் நிவேதா, பேபி ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெற்றோர் கோரிக்கையை மனுவாக பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் பெற்றோர் கலைந்து சென்றனர்.